Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Feb 26, 2016

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி புதிய அலைவரிசை இன்டெல்சாட் 17 @ 66.0 ல் ஆரம்பம்

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி புதிய அலைவரிசை இன்டெல்சாட் 17 @ 66.0 ல் ஆரம்பம்.
TP 3845 V 27682 (MPEG 4 DVBS1)

Feb 21, 2016

வானவில் டிவி(VANAAVIL TV) புதிய தமிழ் தொலைக்காட்சி இன்டல்சாட்20 @ 68.5 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ப்ளாஸ் டிவியின் பெயர் வானவில் தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தற்பொழுது 
ஒளிபரப்பாகி வரும் அலைவரிசையில் இருந்து புதிய அலைவரிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பை வழங்கி வரும் வானவில் டிவி புதிய நிகழ்ச்சிகளுடன் 24 நேர ஒளிபரப்பை
தொடங்கியுள்ளது.
தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள அலைவரிசை சிக்னல் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில்
கிடைக்கிறது.முன்பு பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் அலைவரிசை மாற்றம் செய்து வானவில் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.இலவச ஒளிபரப்பாக வானவில் டிவி புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக நொய்டா என்எஸ்டிபிஎல் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் செயற்கைகோள் ஒளிபரப்பாகி வந்தது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite              Intelsat20@68.5E(C-Band)
Freq Rate           4076
Symbol Rate      3600
Polar                  Vertical
Modulation        Mpeg4/Dvb s2
Mode                 FTA

Feb 1, 2016

ஆரஞ்சு டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் பாடல்களுடன் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி ஆரஞ்சு டிவி என்ற பெயரில் இன்டல்சாட்17யில் உதயமாகியுள்ளது.தொலைக்காட்சியின் தற்சமய தொடக்க சோதனை ஒளிபரப்பு தமிழ் திரைப்பாடல்களுடன் ஒளி உலா வருகிறது.ஆரஞ்சு டிவி பெங்காளி மொழி தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் தொடக்கப்பட்டுள்ளது.கடந்த சில லருடங்களாக இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் தெலுங்கு மொழி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.விரையில் தொலைக்காட்சிக்கானதமிழ் பெயருடன் 24 மணி ஒளிபரப்பு தொடக்கலாம்.

அலைவரிசை விபரங்கள்:

Satellite Intelsat17@66.0E(C-Band)

Freq Rate : 3877

Symbol Rate : 14300

Polarity : Horizontal

Modulation : Mpeg4/Dvb s2

Mode : Fta


Jan 31, 2016

இலங்கையின் உதயம் டிவி HD பெப்ரவரி 01 இல் உதயம்!!!

இலங்கை வாழ் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உதயம் டிவி தமது ஒளிபரப்பை இலங்கையின் சுதந்திரதின மாதமான பெப்ரவரி 01 இல் ஆரம்பிக்கவுள்ளது.இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் செயற்கைகோள் ஒளிபரப்பு அல்லாது தரைவழி மற்றும் இணையதளம் வயிலாக ஒளிபரப்பாகி வருகிறது. உதயம் டிவியின் ஒளிபரப்பு இலங்கையின் UHF அலைவரிசை 54 இல் விடப்படவுள்ளது. அதுவும் அதி நவீன உயர் தொழிநுட்பத்தில் UHF ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. உதரணமாக சொல்வதனால் இலங்கையின் கிரு டிவி போன்றதொரு மிக தெளிவான ஒளிபரப்பாக இருக்கும். மற்றும் Dialog TV DTH சேவை ஊடாகவும் ஒளிரபரப்ப உள்ளது.


மேலும் செய்மதி ஊடகவும் தனது ஒளிபரப்பை இலவசமாக உலக தமிழர்களுக்காக வழங்கவுள்ளது. அது எந்த செய்மதி என்ற விபரம் அறிய நாம் உதயம் டிவி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டபோது அது சம்பந்தமான முழுமையான தகவலை எம்மால் பெற முடியவில்லை.எனினும் அது ஒரு தெற்காசியாவை மையப்படுத்திய செயற்கைகோள் (AsiaSat???Eutelsat???) என்ற தகவல் மட்டும் எமக்கு கிடைத்தது.தற்பொழுது இணையதளம் மூலமாக countdown தொடங்கபட்டுளது. மேலும் இணையதளம் மூலமாக பரீட்சார்த்த ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. இதில் பாடல்களும், செய்தி சுருக்கங்களும், நிகழ்ச்சி முன்னோட்டங்களும் ஒளிபரப்பபடுகின்றது. மேலும் முகப்பு புத்தகம் வாயிலாகவும் செய்திகளை பிரசுரித்து வருகிறது.  இது முழுக்க செய்தி சேவை தொலைகாட்சியா! இல்லை பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெறுமா என்பதை இன்னும் 01 நாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Jan 27, 2016

டிடி பிரி டிஷ் டிடிஎச் தொலைக்காட்சிகள் இன்சாட்4பி செயற்கைகோளில் இருந்து ஜிசாட்15க்கு பிப்ரவரி 1 முதல் மாற்றம்

நண்பர்களே இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மாதந்திர கட்டண இன்றி இந்திய மொழிவாரியான தொலைக்காட்சிகளை இலவசமாக காண இந்திய அரசின் பிரசார் பாரதி தொடங்கிய டிடி பிரி டிஷ் டிடிஎச் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தற்சமயம் ஒளிபரப்பாகி வந்த இன்சாட்4பி செயற்கைகோளில் இருந்து கடந்த வருடத்தில் விண்ணில் ஏவப்பட்ட புதிய செயற்கைகோளான ஜிசாட்15க்கு வரும் பிப்ரவரி 1 திகதி முதல் ஒளிபரப்பு மாற்றம் 
செய்யப்படவுள்ளது.2003 ஆண்டில் தொடங்கிய டிடிபிரி டிஷ் டிடிஎச்யில் மொத்தம் 60 மேற்பட்ட அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பை வழங்கி வருகிறது.கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் ரீடியூன் செய்து தொலைக்காட்சிகளை காணலாம்.இனி வரக்கூடிய காலங்களில் மேலும் புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு இப்புதிய செயற்கைகோளில் தொடங்கலாம்.
புதிய அலைவரிசைகளின் விபரங்கள்:
Satellite               GSAT15@93.0E(KU-Band)
Freq Rate            11090,11170,11470,11510,11550
Symbol Rate       29500
Polar                   Vertical
Modulation         Mpeg2/Dvb s
Mode                  FTA

Jan 26, 2016

ஒன்எஸ் டிவி(1YES TV TAMIL) தமிழ் தொலைக்காட்சி புதுபொலிவுடன் இன்சாட்4எயில் ஒளிபரப்பை தொடங்கியது

நண்பர்களே சேலம் மாவட்டத்தில் இருந்து கடந்த சில வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான எஸ் டிவி உலகளவிய
செயற்கைக்கோள் ஒளிபரப்பு தற்சமயம் புதிதாக இந்தியாவின் இன்சாட்4எ

செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.
எஸ்டிவியை பொறுத்தமட்டிலும் 
கடந்த வருடத்தில் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது. தற்சமயம் வடமாநில ஆர்விஷன் ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் ஒன்எஸ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியை காண அதிநவின MPEG4/DVB S 
தொழில்நுட்ப வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் காணலாம்.6 முதல் 8.19.12 அடி அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம்.இலவச தொலைக்காட்சியாக எஸ்டிவி இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தற்சமய ஒளிபரப்பு விரைவில் நிறுத்தப்படலாம்.மேலும் ஏபிஎஸ்2@75.0 நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவரிசையிலும் ஒன்எஸ்டிவி தமிழ் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்
Satellite             Insat4A@83.0E(C- BAND)
Freq Rate          3755
Symbol Rate     13330
Polar                  Horizontal
Modulation        Mpeg4/Dvb s2
Mode                 FTA

Jan 14, 2016

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்தின் உழவர் தினம் மற்றும் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நண்பர்களே டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்தின் உழவர் தினம் மற்றும் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.